`இந்த 4 பேரும் இணைந்து பணியாற்ற வேண்டும்'- எம்.ஜி.ஆர் சொன்னதை கூறிய ஓபிஎஸ் மகன்

`இந்த 4 பேரும் இணைந்து பணியாற்ற வேண்டும்'- எம்.ஜி.ஆர் சொன்னதை கூறிய ஓபிஎஸ் மகன்

"ஈபிஎஸ், சசிகலா, தினகரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எண்ணம்" என்று தெரிவித்துள்ளார் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத்.

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத், "கழகத்தில் அனைவரும் ஒன்று, அனைவரும் விரைந்து செயல்பட்டால் தான் நாம் வெற்றி பெற முடியும் என்கிற நிலை, அடிமட்ட தொண்டர்களின் எண்ணமும் அது தான். அதைத்தான் நானும் வலியுறுத்துகிறேன்.

சின்னம்மா (சசிகலா), டி.டி.வி.தினகரன், இபிஎஸ், கழக ஒருங்கிணைப்பாளர் அனைவரும் ஒரு கொடியின் கீழ் வரவேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம். சாமானியரும் பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது அதிமுக. தொண்டர்களை உயர்ந்தவர்களாக நினைத்தவர் எம்.ஜி.ஆர். அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டும் என்பது தான் தொண்டர்களின் எண்ணம். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கியமான கருத்தில் ஒன்று. பொதுக்குழு அதிமுக விதியை பின்பற்றி கூட்டப்படவில்லை என்பது தான். சட்ட விதிக்கு புறம்பாக நடைபெற்றது என்ற கருத்தை பதிவிட்டுள்ளது.

கழகத்தின் தலைமைப் பொதுச் செயலாளர் இல்லாததால் இந்த பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு என்று தொண்டர்கள் முடிவெடுத்தார்கள். அதன் பிறகு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் தான் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுடைய பதவிக் காலம் 2026 வரை உள்ளது. அதற்குள் இந்த 2 ஆயிரத்து 600 பேரும் விதியை மாற்றுவதற்கு அதிமுக சட்டவிதியில் இடம் இல்லை" என்றார்.

இறுதியாக, "முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இதற்கு முன்பாக தேர்தல் நேரத்தில் அறிவித்த அறிவிப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in