கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகனுக்கு ரூ.12 லட்சம் கடன்: வேட்புமனுவில் தகவல்!

சாண்டி உம்மன்
சாண்டி உம்மன்

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மறைவையடுத்து, புதுப்பள்ளி தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அவரது மகன் சாண்டி உம்மன் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவில் ரூ.12 லட்சம் கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை 18-ம் தேதி காலமானாா். கேரளாவில் புதுப்பள்ளி தொகுதியில் 1970 முதல் 53 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்த அவா், இரு முறை கேரள முதல்வராக பதவி வகித்துள்ளாா். உம்மன் சாண்டியின் மறைவையடுத்து புதுப்பள்ளி தொகுதிக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

சாண்டி உம்மன்
சாண்டி உம்மன்

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் (37) போட்டியிடுகிறார். இதற்காக நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் சொத்து மதிப்பு குறித்த விவரங்களில், 8 வங்கிக் கணக்குகள் மற்றும் கையிருப்பு ரூ.15,000 சேர்த்து தன்னிடம் மொத்தமாக ரூ.15,98,600 இருப்பதாகவும் நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வங்கி்களில் ரூ.12 லட்சம் கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 10 ஆண்டுகள் முதல்வராக இருந்த உம்மன் சாண்டியின் மகன் கடனாளியாக இருப்பது கேரள மக்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாண்டி உம்மன்
சாண்டி உம்மன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in