உம்மன் சாண்டி மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: சிபிஐ அதிரடி அறிக்கை தாக்கல்!

உம்மன் சாண்டி
உம்மன் சாண்டி

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் உண்மை இல்லை என தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சோலார் பேனல் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவர் ஜூலை 19, 2013 அன்று போலீஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில், ‘2012-ல் அப்போதைய கேரள முதல்வர் உம்மன் சாண்டி, சில அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் மத்திய அமைச்சர்கள் உட்பட 6 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.

கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் அரசு 2021- ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என குற்றஞ்சாட்டியது. காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், தேர்தல் நெருங்கி வருவதால் இந்த முடிவை மார்க்சிஸ்ட் அரசு எடுத்ததாகவும் காங்கிரஸ் விமர்சித்தது.

இதனிடையே இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்கிய சிபிஐ, குறிப்பிட்ட நாளில் அந்தப் பெண் அப்போதைய முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்திற்குச் சென்றதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. எனவே, உம்மன் சாண்டி மீதான குற்றச்சாட்டில் எந்த அடிப்படையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் சிபிஐ தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in