டிவி விவாதங்களில் இவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்: பட்டியலை அறிவித்தார் டி.டி.வி. தினகரன்

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அமமுக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதற்கு வசதியாக செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார் டி.டி.வி.தினகரன்.

தமிழகத்தில் பெரும்பாலான காட்சி ஊடகங்களில் தினசரி விவாத நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. இதில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் கலந்துகொள்கையில் சிலநேரம் கட்சிக் கருத்துகளையும் மீறி, தங்கள் சொந்தக் கருத்துகளையும் தெரிவித்து விடுகின்றனர். இது அரசியல் கட்சியினருக்கு தேவையில்லாத தலைவலியையும் ஏற்படுத்திவிடுகிறது.

இதனால் அனைத்து அரசியல் கட்சிகளுமே ஊடக விவாதங்களில் கலந்துகொள்வதற்கு என தனியாக குழு வைத்துள்ளது. இதை அமமுகவும் கையில் எடுத்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று தன் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அந்தக்குழுவில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன், முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன், நடிகையும், கொள்கை பரப்பு செயலாளருமான சி.ஆர்.சரஸ்வதி, முன்னாள் எம்.எல்.ஏ தொட்டியம் ராஜசேகரன், டேவிட் அண்ணாதுரை, கோமல் அன்பரசன், நல்லதுரை, வீரவெற்றி பாண்டியன், குரு முருகானந்தம் ஆகிய 9 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இந்த 9 பேர் மட்டுமே இனி அமமுக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளார் டி.டி.வி.தினகரன்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in