‘மோடி - அமித் ஷா ஆகியோரால் மட்டுமே தேசிய அளவிலான பிரச்சினைகளை தீர்க்க முடியும்’ -முன்னாள் பிரதமர் புகழாரம்

அமித் ஷா - மோடி
அமித் ஷா - மோடி

‘பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரால் மட்டுமே தேசிய அளவிலான பிரச்சினைகளை தீர்க்க முடியும்’ என்று உறுதி தெரிவித்திருக்கிறார் முன்னாள் பிரதமரான தேவ கவுடா.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைத் தவிர, தேசிய அளவில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் தலைவர்கள், தற்போது இந்தியாவில் யாரும் இல்லை என தேவ கவுடா இன்று தெரிவித்தார்.

இவர்கள் இருவரால் மட்டுமே பிரச்சினை எதுவானாலும் உரிய தீர்வு காண முடியும் என்றும் தேவ கவுடா தெரிவித்தார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பிரதமராக மோடியின் சேவை சென்றடைந்து குறித்து தான் நன்கறிவேன் என்றும் அவர் தெரிவித்தார். இதையே ’இந்த நாட்டில் மோடியைத் தவிர வேறு தலைவர்கள் இல்லை’ என்றும் தேவ கவுடா சிலாகித்தார்.

குமாரசாமி- தேவகவுடா
குமாரசாமி- தேவகவுடா

மக்களவை தேர்தலை முன்னிட்டு கர்நாடக மாநிலத்தில் பாஜகவுடன் இணைந்து தேவ கவுடா - குமாரசாமி கவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் களத்தில் குதிக்கிறது. மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாஜக 25 தொகுதிகளிலும் மத சார்பற்ற ஜனதா தளம் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

சட்டப்பேரவை தேர்தலில் எதிரும், புதிருமாய் போட்டியிட்ட பாஜக - ஜேடிஎஸ் கட்சிகள், பொது எதிரியான காங்கிரஸ் வென்று ஆட்சியைப் பிடித்ததும் சுதாரித்தன. உட்னடியாக கடந்த செப்டம்பரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்தது.

தற்போது 91 வயதாகும் தேவ கவுடா முன்னிலையில் இந்த கூட்டணி மக்களவைத் தேர்தலில் களம் காணுகிறது. கூட்டணி பங்கீட்டில் சுமுகமான முடிவு எட்டப்பட்டதை அடுத்து, இன்றைய தினம் பேசிய தேவ கவுடா, மோடி - அமித் ஷா ஆகியோரை வெகுவாகப் புகழ்ந்தார். தொடர்ந்துக் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பை சாதாரணமாக கணிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். எலியும் பூனையுமாக இருந்த பாஜக - ஜேடிஎஸ் கட்சிகள் தற்போது ஒரே குடையின் கீழ் இணைந்திருப்பதன் மத்தியில் அவற்றினிடையே ஒருங்கிணைப்பு வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேவ கவுடா
தேவ கவுடா

“நமது எதிரிகள் மிகவும் வலிமையானவர்கள். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதையும், நமது கருத்து வேறுபாடுகளையும் மறந்துவிட்டு களத்தில் இறங்குவோம். கார்கே தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நிதி ஆதாரங்கள் கர்நாடகாவில் உண்டு என்பதால், களத்தில் காங்கிரஸ் கட்சியை அத்தனை இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று பாஜக மற்றும் ஜேடிஎஸ் நிர்வாகிகளை தேவகவுடா எச்சரித்தார்.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in