ஏழைகளுக்கான அரசை காங்கிரஸால் தான் தரமுடியும்: சொல்கிறார் ராகுல்காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மத்திய பாஜக அரசு, சமையல் எரிவாயு விலையை 50 ரூபாய் உயர்த்தியிருக்கும் நிலையில் எழை மக்களுக்கான நல்ல அரசை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தர முடியும் என ராகுல் காந்தி எம்.பி அறிக்கை விட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “கியாஸ் சிலிண்டர் விலை 410 ரூபாய் தான் கடந்த 2014-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது மானியமாக 827 ரூபாய் வழங்கப்பட்டது. இப்போது 2022 பாஜக ஆட்சியில் கியாஸ் சிலிண்டர் விலை 999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதில் மானியம் எதுவும் இல்லை. அப்போது இரு சிலிண்டர்கள் வாங்கும் விலையில் தான் இப்போது ஒரு சிலிண்டரே வாங்க முடியும். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கான ஆட்சியை காங்கிரஸால் மட்டுமே தரமுடியும் ”என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 6 வாரங்களில் மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது இது இரண்டாவதுமுறை. நேற்றும், சமையல் எரிவாயு விலை 50 ரூபாய் கூடிய நிலையில், சென்னையில் ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் 1015 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in