தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி; முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்இந்து தமிழ் திசை

தமிழகத்தில், தற்போது கடுமையான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இன்று சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியலிங்கம் குறிப்பிட்டார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் பின்வருமாறு பதில் அளித்தார்.

“எதிர்க்கட்சி உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆன்லைன் சூதாட்டத்தைப் பற்றிச் சொன்னார். இதுகுறித்து தொடர்ந்து பத்திரிகைகளிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தவரையில் சென்ற ஆட்சியிலே தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 3-6-2001 அன்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலே 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறிவிட்டது.

ஆனாலும், அந்தத் தீர்ப்பின்மீது சட்ட ஆலோசனை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தினுடைய தீர்ப்பைத் தடை செய்யக்கோரி இந்த அரசு உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்திருக்கிறது. வழக்கைப் பொறுத்தவரைக்கும் விசாரனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. விரைவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழகத்திலே நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற உறுதியளிக்கிறேன்” என முதல்வர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in