இருளில் தவிக்கும் தமிழகம்: திமுக அரசுக்கு எதிராக அதிமுக போஸ்டர் பிரச்சாரம்

இருளில் தவிக்கும் தமிழகம்: திமுக அரசுக்கு எதிராக அதிமுக போஸ்டர் பிரச்சாரம்

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று ஓராண்டை எட்டியுள்ளது. திமுகவினர் இதை மிகவும் உற்சாகக் கொண்டாடி வருகின்றனர். அரசுப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் தொடங்கி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் சமூகநீதித் திட்டங்கள் வரை ஓராண்டில் செய்த சாதனைகளை பட்டியல் இடுகிறது திமுக. இந்நிலையில் அதிமுக சார்பில் ஓராண்டு வேதனை என்னும் போஸ்டர் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.

திமுக அரசில் மின்வெட்டு அங்கொன்றும், இங்கொன்றுமாக பிரச்சினையாகவே உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே மின்சாரப் பிரச்சினை தலைதூக்கியபோது, அணில்கள் தான் மின் தடைக்கு காரணம் என மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியது சர்ச்சையானது. இதேபோல் மீண்டும் சிலவாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்படாத மின்வெட்டு தலைதூக்கியது. அப்போது மத்திய அரசு போதிய அளவு நிலக்கரித் தரவில்லை எனவும் மாநில அரசு குற்றச்சாட்டைக் கிளப்பியது.

இந்நிலையில் திமுகவினர் தமிழகம் முழுவதுமே இன்று ஆட்சியின் ஓராண்டை, தங்களின் சாதனையாக பணிகளைப் பட்டியலிட்டு உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். விடியல் அரசு எனவும் திமுக அடைமொழியை முன்னெடுக்கிறது. இந்நிலையில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், “விடியா ஆட்சியின் ஓராண்டு வேதனை இருளில் தவிக்கும் தமிழகம் மின்மிகை டூ மின்வெட்டு” என வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. தமிழக அரசு, பல சாதனைகளை இந்த ஓராண்டு காலத்தில் செய்திருந்தாலும் மின்சாரப் பிரச்சினையைக் கையில் எடுத்து அதிமுக களமாடுவது அக்கட்சியினருக்கு சற்றே நமச்சலைக் கொடுத்திருக்கிறது.

Related Stories

No stories found.