`தி.மு.க. பாஸ் மார்க் வாங்கவில்லை'- ஓராண்டு ஆட்சி குறித்து ஓபிஸ் கமென்ட்

`தி.மு.க. பாஸ் மார்க் வாங்கவில்லை'- ஓராண்டு ஆட்சி  குறித்து ஓபிஸ் கமென்ட்
இறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறும் ஓபிஎஸ்

திமுகவின் ஓராண்டு கால ஆட்சிக்கு பெயில் மார்க் கொடுத்துள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் ஓபிஎஸ்
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் ஓபிஎஸ்

தஞ்சை அருகே களிமேட்டில் நடந்த கோயில் திருவிழாவில் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து பதினொரு பேர் உயிரிழந்தனர். அந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அதிமுக சார்பில் நிவாரண நிதியும் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``களிமேடு தேர் விபத்தில் இறந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களில் வீடு இல்லாமல் யாராவது இருந்தால் அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். இறந்த குடும்பத் தலைவர்களின் வீட்டில் உள்ளவர்களின் கல்விச் செலவை அரசே முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதிமுக சார்பில் நிவாரண நிதி
அதிமுக சார்பில் நிவாரண நிதி

பொதுவாக தேர் செல்லும் பாதையில் சாலைகள் மேடு பள்ளங்கள் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்ததாக தெரியவில்லை. தேரோட்டம் முடியும் வரை மின் இணைப்பை துண்டித்திருக்க வேண்டும். இங்கு அவ்வாறு செய்யவில்லை. கவனக்குறைவாக இருந்த அரசு அதிகாரி யாராக இருந்தாலும் அவர்களின் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணைக் குழு பாகுபாடில்லாமல் விசாரிக்க வேண்டும்.

முதல்வர் பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்வது என்பது உலக மகா சாதனை அல்ல. தி.மு.கவின் ஓராண்டு ஆட்சி என்பது தோல்வி அடைந்துள்ளது. எந்த ஒரு வாக்குறுதியையும் அது நிறைவேற்றவில்லை தமிழகத்தில் தி.மு.க எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மின்வெட்டு வரும் என்பது கடந்த கால வரலாறு. தி.மு.க. ஓராண்டு ஆட்சி பாஸ் மார்க் வாங்கவில்லை. பெயில் மார்க்தான் வாங்கியுள்ளது" என்று கூறினார்.

படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

Related Stories

No stories found.