நாட்டுக்கு சேவை செய்ய விரும்பும் யாரும் அக்னிவீரராக இருக்கமாட்டார்: அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

அக்னிபத் இராணுவ ஆள்சேர்ப்புத் திட்டத்தை விமர்சித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், 'நாட்டுக்கு சேவை செய்ய விரும்பும் ஒருவர் எப்போதும் அக்னிவீரராக விரும்பமாட்டார்' என்று கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவைத் தொகுதியில் டிசம்பர் 5- ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்த சூழலில் மெயின்புரியில் நடந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அகிலேஷ், “ நாட்டிற்கு சேவை செய்ய விரும்புபவர் யாரும் அக்னிவீரராக மாற விரும்ப மாட்டார். பரூக்காபாத்தில் ஆட்சேர்ப்பு நடந்தது, ஆனால் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. இந்த திட்டங்களின் மூலம் பட்ஜெட்டை மிச்சப்படுத்துவதாக அரசு கூறுகிறது, ஆனால் நாடே பிழைக்காத போது, பட்ஜெட் எப்படி வாழ முடியும்" என்று அவர் கூறினார்.

முன்னாள் ராணுவ வீரர்களின் ஆதரவைக் கோரிய அவர், "எங்கள் கட்சியினர் உழைக்கிறார்கள், எங்கள் தலைவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள், நீங்கள் எங்களை ஆதரித்தால், நமக்கு எந்த கவலையும் இருக்காது” என தெரிவித்தார்

சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக கருதப்படும் மெயின்புரி தொகுதிக்கு அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மறைந்ததால் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in