உள்ளாட்சியில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு: நாகாலாந்து அரசு அசத்தல் அறிவிப்பு

நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ
நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ

நகர்ப்புற உள்ளாட்சியில் பெண்களுக்கு மூன்றில் ஒருபங்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாகாலாந்து சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ கூறுகையில், “நாகாலாந்து நகர்ப்புற மசோதா 2023- ல் அறிவிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான மூன்றில் ஒருபங்கு இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல்களின்படி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநிலத்திலுள்ள பழங்குடியின அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடக்கம் தான் தவிர முடிவல்ல. மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் பெண்கள் பங்கேற்று செயலாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.

நாகாலாந்தில் கடந்த இரு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைத் தொடர்ந்து தற்போதைய நாகாலாந்து நகர்ப்புற உள்ளாட்சி மசோதா 2023 உருவாக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் டி.ஆர்.செலியாங் தலைமையிலான ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழு இந்த மசோதாவை ஆய்வு செய்து, மேலும் சில ஷரத்துகளை இணைக்கப் பரிந்துரை செய்தது ” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in