`ஒரே நாடு, ஒரே தேர்தல் திமுகவிற்கு பயம் வந்துவிட்டது'- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்hindu

சென்னை ராயபுரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நாடாளுமன்ற தேர்தல் வரும் சூழலில் ஒரே நாடு, ஒரு தேர்தல் குறித்து அனைத்து மாநில கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் சார்பில் கருத்து கேட்கக்பட்ட நிலையில் அதிமுக சார்பில் இன்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடந்தால் தமிழர் அனைவருக்கும் உண்மையான பொங்கல் விழாவாக இருக்க முடியும். ஒரே நாடு, ஒரே தேர்தல் எல்லாருக்கும் கொண்டாட்டம் என்றால் திமுகவிற்கு மட்டும் வயிற்றில் புளியை கரைக்கும்.

திமுகவிற்கு உடன்பட்டால் ஆளுநர் தேவை இல்லையென்றால் தேவையில்லை இதுதான் திமுகவின் கொள்கையாக இருக்கிறது. உதயநிதி பதவி ஏற்பு, எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஈபிஎஸ் மீது புகார், சட்டமன்றத்தில் வானரங்களை போன்று செயல்பட்டு சட்டையை கிழித்துக் கொண்டு ஆளுநரிடம் தானே சென்றார்கள். அதற்கெல்லாம் திமுகவிற்கு ஆளுநர் தேவைப்பட்டாரா..? ஆனால் இப்போ தேவையில்லையாம்.

சட்டப்பேரவையில் 62 உறுப்பினர்களை கொண்டுள்ள அதிமுகவிற்கு அதன் உரிமை மறுக்கப்படுகிறது. ஆளுநர் உரையின் போது எந்தவிதமான தீர்மானத்தை கொண்டு வரக் கூடாது. அதுதான் பேரவையின் விதி, முதலமைச்சர் விதியை மீறி எப்படி தீர்மானம் கொண்டு வந்தார். சபாநாயகர் இருக்கையில் இருக்கும் போது தான் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியும். அதுதான் விதி. ஆனால் அன்றைக்கு நடந்த எல்லாம் தலை விதி.

ஆளுநர் மீதான முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் செல்லாது. ஸ்டாலின் தன் புகழை தானே பாடி வருகிறார். வாய்மையே வெல்லும் என்பதை பொய்மையே வெல்லும் என திமுக அரசு மாற்றிவிட்டது. சொன்ன வாக்குறுதி எதையுமே திமுக செய்யவில்லை. தமிழக மக்கள் எப்போது தேர்தல் வரும் திமுகவிற்கு தக்கப்பாடம் புகட்டலாம் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தமிழ் புத்தாண்டு குறித்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த முடிவே சரியானது. முதலமைச்சரை அவரது கூட்டணி கட்சித் தலைவர்கள் வேண்டுமானால் பாராட்டலாம். ஆனால் தமிழக மக்கள் யாரும் பாராட்டவில்லை. மாணவர்கள் நலன் கருதி எஸ்பிஐ தேர்வை மாற்றுத் தேதியில் வைக்க வேண்டும். அதிமுகவை பொருத்தவரை பேரறிஞர் அண்ணாதான். அதனால் தமிழ்நாடு என்பதே எங்களது நிலைப்பாடும்'' என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in