
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியிருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கருதுபவர்கள் இன்றுமுதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. அதன்படி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் தகுதி இருந்தும் தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக பலர் புகார் தெரிவித்திருந்தனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. கோட்டாச்சியர் அலுவலகங்கள் அல்லது இ சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!