`ஒரே நாடு, ஒரே தேர்தல் வர வேண்டும் எம்பெருமானே'- பிரார்த்தனை செய்யும் வி.பி.துரைசாமி

`ஒரே நாடு, ஒரே தேர்தல் வர வேண்டும் எம்பெருமானே'- பிரார்த்தனை செய்யும் வி.பி.துரைசாமி

"ஒரே நாடு, ஒரே தேர்தல் வரவேண்டும் என்று எம்பெருமானை வேண்டுகிறேன்" என பாஜக மாநில துணைத் தலைவரான, முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி பேசினார்.

நாமக்கல் அருகே புதன்சந்தையில் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத் தலைவரான முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி கலந்து கொண்டு பேசுகையில், "தமிழக முதல்வர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார். அதனால் நிச்சயமாக நான் வணங்குகின்ற எம்பெருமானை வேண்டுவது ஒரே நாடு, ஒரே தேர்தல் வரவேண்டும். இந்நடைமுறை வரும் 2024-ம் ஆண்டு வரவேண்டும். நீங்களும் பிரார்த்தனை செய்துக் கொள்ளுங்கள். இந்த ஆட்சியை வைத்துக் கொண்டு நல்லாட்சி நடத்த முடியாது. எவ்ளோ கொலைகள், எவ்ளோ கொள்ளைகள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் லாக்அப் டெத் நடைபெற்றுள்ளது. இந்த 3 பேரும் தாழ்த்தப்பட்டவர்கள். இதை நான் பேசாமல் வேறு யார் பேச முடியும். பாஜக தான் இதை கேட்கும். எந்த மாநிலத்திலும் இதுபோல் நடக்கவில்லை. லாக்அப் டெத் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழகம். தமிழக முதல்வர் ஏதோ பேசி கதை விடுகிறார்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in