ஒரே நாடு ஒரே தேர்தல்: பாஜக முழக்கத்தை ஆதரிக்கும் அதிமுக

ஒரே நாடு ஒரே தேர்தல்: பாஜக முழக்கத்தை ஆதரிக்கும் அதிமுக

"ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வரவேற்கக் கூடியது. ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பிரதமர் மோடி கூறினால் அரசியல் ரீதியாக பார்க்கப்படும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறது மத்திய அரசு. இதன் ஒரு பகுதியாக ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்திவிட்டது. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் முழக்கம் தற்போது பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியால் பேசப்பட்டு வருகிறது. இதற்கு, 5 மாநில தேர்தல் முடிவுகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையமும் ஆமோதித்துள்ளது.

செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நல்ல பரிந்துரை. இதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அரசியமைப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அது குறித்து நாடாளுமன்றத்தில் முடிவெடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்த தயாராக உள்ளது" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள அமைச்சர் கடம்பூர் ராஜூ, "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வரவேற்கக் கூடியது. ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பிரதமர் மோடி கூறினால் அரசியல் ரீதியாக பார்க்கப்படும். ஆனால் அதை நடைமுறைப்படுத்துகின்ற தேர்தல் ஆணையமே கூறியிருப்பது வரவேற்கக் கூடியது. 2021ல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தாலும் அதிமுக வரவேற்று இருக்கும்" என்று தெரிவித்தார்.

இதே நேரத்தில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிமணியன் சுவாமி, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை நடக்காது என்று கூறினார்.

Related Stories

No stories found.