முடிவுகள் வெளியாகும் முன்னரே கார்கேவை தலைவர் என்றாரா ராகுல் காந்தி? - காங்கிரஸ் கட்சி விளக்கம்

முடிவுகள் வெளியாகும் முன்னரே கார்கேவை தலைவர் என்றாரா ராகுல் காந்தி? - காங்கிரஸ் கட்சி விளக்கம்

தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாகவே காங்கிரஸ் தலைவர் என கார்கேவை ராகுல் காந்தி குறிப்பிட்டது குறித்து கட்சி விளக்கம் அளித்துள்ளது

நேற்று வெளியான காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகளின்படி மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகளும், சசி தரூர் 1,072 வாக்குகளும் பெற்றனர். தேர்தல் முடிவுகள் நேற்று மதியம் 2 மணிக்கு மேல் வெளியானது.

‘பாரத் ஜோடோ யாத்ரா’வை ஆந்திராவில் வழிநடத்தும் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த நேரத்தில், மதியம் 1.30 மணியளவில் அதோனியின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, “காங்கிரஸ் தலைவரின் பங்கு குறித்து என்னால் கருத்து கூற முடியாது, அது குறித்து கார்கே கருத்து தெரிவிக்க வேண்டும். எனது பங்கைப் பொருத்தவரையில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். எனது பங்கு என்ன, நான் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை தலைவர் முடிவு செய்வார். அதை நீங்கள் கார்கே மற்றும் சோனியாஜியிடம் கேட்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் இறுதி அதிகாரம் காங்கிரஸ் தலைவர் தான். கட்சி எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதை அவர் சரியாக தீர்மானிப்பார்" என்று கூறினார்.

தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்னரே ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேயை காங்கிரஸ் தலைவராக அறிவித்ததாக சர்ச்சைகள் எழுந்தது. இது குறித்து பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “மதியம் 1 மணியளவில் அதோனியில் தொடங்கிய செய்தியாளர் சந்திப்பின் போது ராகுல் காந்தி கார்கேஜியை காங்கிரஸ் தலைவராக அறிவித்ததாக தவறான ஊடகச் செய்திகள் வந்துள்ளன. பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடங்கும் முன்னரே வாக்குப்பதிவின் திசை மிகவும் தெளிவாக இருந்தது என்பதுதான் உண்மை” என விளக்கமளித்துள்ளார்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மொத்தம் எண்ணப்பட்ட வாக்குகள் 9,385, அதில் கார்கே 7,897 வாக்குகளும், சசி தரூர் 1,072 வாக்குகளும் பெற்றனர் என்று கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி (CEC) தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்தார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு-காந்தி குடும்பத்தைச் சேராத மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in