ஜார்க்கண்ட் முதல்வரை தகுதிநீக்கம் செய்யக் கோரி மனு: ஆளுநருக்கு சீல் வைக்கப்பட்ட கடிதம்!

ஹேமந்த் சோரன்.
ஹேமந்த் சோரன்.

சுரங்க குத்தகையை தனக்கு நீட்டித்ததன் மூலம் தேர்தல் சட்டத்தை மீறியதற்காக முதல்வர் ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தனது கருத்தை தேர்தல் ஆணையம் ஜார்கண்ட் ஆளுநர் ரமேஷ் பைஸுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் கருத்து இன்று காலை சீல் வைக்கப்பட்ட கவரில் ஜார்கண்ட் ராஜ் பவனுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் ஆளுநர் இந்த விவகாரத்தை தேர்தல் குழுவுக்கு (poll panel) அனுப்பியுள்ளார்.

இந்த வழக்கில் மனுதாரரான பாரதிய ஜனதா கட்சி , அரசாங்க ஒப்பந்தங்களுக்கான தகுதி நீக்கம் தொடர்பான மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 ன் பிரிவு 9-A ஐ மீறியதற்காக ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்யக் கோரியுள்ளது.

அரசியலமைப்பின் 192வது பிரிவின் கீழ், மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை தகுதி நீக்கம் செய்வது குறித்து ஏதேனும் கோரிக்கை எழுந்தால், அந்த கோரிக்கை ஆளுநருக்கு அனுப்பப்படும், அவரின் முடிவே இறுதியானது. ஆனால் இதுபோன்ற கோரிக்கைகளுக்கு முடிவெடுப்பதற்கு முன், ஆளுநர் தேர்தல் ஆணையத்தின் கருத்தைப் பெற்று, அந்தக் கருத்தின்படி செயல்படுவார்.

இதுபோன்ற வழக்குகளைக் கையாளும் போது, ​​தேர்தல் குழு ஒரு பாதியளவு அதிகாரம் கொண்ட நீதித்துறை அமைப்பு போல செயல்படுகிறது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in