'ஆமா, அது மாறவே மாறாது'... அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்

மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்

’கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பை விட ஒரு நாளுக்கு 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். அதனால் ஓமந்தாரார் மருத்துவமனை ஒரு காலத்திலும் தலைமைச் செயலகமாக மாறாது. எடப்பாடி பழனிசாமியிடம் தைரியமாக சொல்லலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நவீன கருவிகள் அருகே அமைச்சர் மற்றும் அதிகாரிகள்.
நவீன கருவிகள் அருகே அமைச்சர் மற்றும் அதிகாரிகள்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூபாய் 8.72 கோடி மதிப்புடைய நவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ இயந்திரம் மற்றும் ரூபாய் 3.94 கோடி மதிப்பிலான குடல், இரைப்பை உள்நோக்கி கருவி என மொத்தம் ரூபாய் 12.66 கோடி மதிப்புள்ள நவீன உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்காக   சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’ஓமந்தூரார் பல் நோக்கு மருத்துவமனை என்ற பெயரளவில் மட்டும் இருந்ததை இந்த ஆட்சியில் தான் பல சிறப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட்டது. இருதய அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்டவை அதிகம் செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பை விட ஒரு நாளுக்கு 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர் என்றும் ஓமந்தாரார் மருத்துவமனை ஒரு காலத்திலும் தலைமைச் செயலகமாக மாறாது. எடப்பாடி பழனிசாமியிடம் தைரியமாக சொல்லலாம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in