சிவகங்கை மாவட்டத்தில் 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மருது சகோதரர்கள்
மருது சகோதரர்கள்

மருது சகோதரர்களின் 222 வது நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை
சிவகங்கை

மருதுபாண்டியர் நினைவு நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவர்களது திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமுதாய அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் மருதுபாண்டியர் நினைவு நாளையொட்டி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, திருப்புத்தூர், காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிக்கு அக்.27-ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜீத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in