குட்நியூஸ்... மகளிர் உரிமைத் தொகைக்கு 24-ம் தேதி வரை மேல் முறையீடு செய்யலாம்!

உரிமைத் தொகை விண்ணப்பம்
உரிமைத் தொகை விண்ணப்பம்

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தவர்கள்  மேல் முறையீடு செய்வதற்கு  இம்மாதம் 24-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் உரிமைத்தொகை வழங்கும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்ட நிலையில் 60 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 

அவர்களில் தகுதியான பலரின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் தகுதியானவர்கள் மீண்டும் மேல் முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பம் செய்யும் பெண்கள்
விண்ணப்பம் செய்யும் பெண்கள்

அதனையடுத்து கடைசி நாளான இன்று  வரை சுமார் பத்து லட்சம் பெண்கள் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த நிலையில் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று  தாமதமாக குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்றவர்கள் இம்மாதம் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதாவது குறுஞ்செய்தி வந்த நாளிலிருந்து 30 நாட்கள் வரை அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

இதையும் வாசிக்கலாமே...

HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!

இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!

அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!

வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை  மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in