
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (96). இவரது மனைவி விஜயலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு திடீரென மரணம் அடைந்தார். இவருக்கு ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பழனியம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு போதுமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.