ஓபிஎஸ்சுக்கு போட்டியாக களமிறங்கும் இன்னொரு ஓ.பன்னீர்செல்வம்... உச்சகட்ட பரபரப்பில் ராமநாதபுரம் தொகுதி!

ஓ.பன்னீர்செல்வம், ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம், ஓபிஎஸ்

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அதே தொகுதியில் உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்ற மற்றொரு நபரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சையாக களமிறங்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவை கைப்பற்ற எடுத்துள்ள பல சட்டப் போராட்டங்களிலும் தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

சமீபத்தில் அதிமுக கட்சி பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் இயங்கி வருகிறார், இப்படி எல்லா பக்கமும் பெரும் பின்னடைவுகளை சந்தித்து வரும் ஓபிஎஸ்சுக்கு இப்போது ராமநாதபுரத்தில் புதிய தலைவலி ஒன்று முளைத்துள்ளது.

மேக்கிழார்பட்டி ஓ.பன்னீர்செல்வம்
மேக்கிழார்பட்டி ஓ.பன்னீர்செல்வம்

பொதுவாக ஏதேனும் தொகுதியில் முக்கிய தலைவர்கள் போட்டியிட்டால், அவரின் பெயர் கொண்ட பலரும் போட்டியிடுவது வழக்கம். ஆனால் அதே இனிசியல் போன்றவற்றுடன் அமைவது கஷ்டம்தான். ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரிலேயே மற்றொருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இன்று சுயேட்சை வேட்பாளராக போட்டியிட ஓபிஎஸ் வேட்புமனுத்தாக்கல் செய்த சூழலில், உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்ற மற்றொரு நபரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் நிற்கும் நிலையில், இன்னொரு ஓ.பன்னீர்செல்வமும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இருவரின் பெயரும் வரிசைப்படி அருகருகே இருந்தால் வாக்குகள் பிரியும் என்று அஞ்சுகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்
ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்

இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஓபிஎஸ். மேலும், தங்களது பலத்தை நிரூபிப்பதற்காக ராமநாதபுரம் தொகுதியில் மட்டும் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளார் ஓபிஎஸ். இன்று வேட்புமனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "சின்னங்களை காட்டிலும் வேட்பாளர்களின் கடந்த கால அரசியல் வரலாறு முக்கியம். கடந்த காலங்களில் எவ்வளவு மக்கள் பணிகளை செய்துள்ளார் என்பதை பொறுத்து வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். வாளி, பலாப்பழம் மற்றும் திராட்சை பழம் ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் கேட்டுள்ளேன். ராமநாதபுரம் தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in