ஆளுநர் கடைசி வரை அவையில் இருந்திருக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் கருத்து

ஆளுநர் கடைசி வரை அவையில் இருந்திருக்க வேண்டும்:  பிரேமலதா விஜயகாந்த் கருத்து

ஆளுநர் அவரது பொறுப்பை உணர்ந்து கடைசி வரை அவையில் இருந்து சென்றிருக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரமலதா விஜயகாந்த் கூறினார்.

கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி கோட்டையை முற்றுகை பேரணியில் இன்று ஈடுபட்டனர். காவல் துறையினர் செவிலியர்களை ராஜரத்தினம் மைதானம் அருகேயே தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். முன்னதாக செவிலியர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தேமுதிக பொருளாளர் பிரமலதா விஜயகாந்த் பேரணியில் பங்கேற்றார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரோனா காலத்தில் தங்களின் உயிரை துச்சம் என கருதி பணியாற்றிய செவிலியர்களை வெளியேற்றுவதை தேமுதிக வன்மையாக கண்டிக்கின்றது. இவர்கள் போன்றோர்களின் கோரிக்கைகளை நிதி நிலையை காட்டி மறுக்கும் தமிழக அரசு, அவர்கள் செய்கின்ற ஊழல் பணத்தை எல்லாம் எங்கே வைக்கிறது? செவிலியர்கள் போராட்டம் மட்டுமன்றி இடைநிலை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர்  தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஆனால், அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு செவி சாய்க்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. கோரிக்கையை நிறைவேற்றப்படாத பட்சத்தில் தேமுதிக இவர்களுடன் இணைந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது தமிழகத்தில் இதுவரை நடைபெறாத ஒன்று. இது கண்டனத்துக்குரியது. ஆளுநர் அவரது பொறுப்பை உணர்ந்து கடைசி வரை அவையில் இருந்து சென்றிருக்க வேண்டும். எல்லோருடைய கருத்து என்னவென்றால் இது திட்டமிட்ட நாடகம் என்று கூறுகிறார்கள். ஆளுநர் பேசும் போது, முதலமைச்சர் தலையிட்டு பேசியுள்ளார். ஆளுநர் பேசும் போது கோஷமிட்டுள்ளனர். சட்டமன்றம் மக்களுடைய வரிப்பணத்தில் நடக்கிறது. அதனால் இந்த சட்டமன்றத்தை மக்கள் ஜனநாயக ரீதியாக பயனடைய செய்ய வேண்டும். தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தும் ஒரு மன்றமாக அதை மாற்றி விட்டார்கள்" என பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in