என்டிஆர் பல்கலைக்கழகத்தின் பெயர் ஒய்எஸ்ஆராக மாற்றம்: ஆந்திர அரசின் அதிரடி அறிவிப்பு

என்டிஆர் பல்கலைக்கழகத்தின் பெயர் ஒய்எஸ்ஆராக மாற்றம்: ஆந்திர அரசின் அதிரடி அறிவிப்பு

ஆந்திராவில் உள்ள டாக்டர் என்டிஆர் சுகாதார பல்கலைக்கழகம் ஒய்எஸ்ஆர் சுகாதார பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள டாக்டர் என்டிஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் ஒய்எஸ்ஆர் சுகாதார பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 31 ம் தேதி திங்கட்கிழமையன்று பெயர் மாற்றத்திற்கான ஆணைகளை ஆந்திர அரசு வெளியிட்டது. பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றுவதற்கான சட்டத்திருத்தம் சட்டசபையால் மேற்கொள்ளப்பட்டது. சட்டசபையில் முன்வைக்கப்பட்ட இந்த சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் நேற்று ஒப்புதல் அளித்தார்.

ஆளுநரின் ஒப்புதலைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட சட்டத்தை அமல்படுத்த முதன்மைச் செயலர் கிருஷ்ணபாபு உத்தரவு பிறப்பித்தார். இதன் விளைவாக, டாக்டர் என்டிஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் டாக்டர் ஒய்எஸ்ஆர் சுகாதார பல்கலைக்கழகம் என்று இனி அழைக்கப்படும்.

ஆந்திராவில் ஆளும் கட்சியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளது. முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையான முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆரை நினைவுகூறும் விதமாக இப்பெயர் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜயவாடாவில் 1986ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் ஆந்திராவின் முன்னாள் முதல்வரான என்.டி.ஆரின் பெயரில்தான் இதுவரை அழைக்கப்பட்டு வந்தது. ஆந்திராவின் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனர்தான் என்.டி.ஆர். இவரின் மருமகனான சந்திரபாபு நாயுடுதான் தற்போது தெலுங்குதேசம் கட்சியின் தலைவராக உள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in