புல்டோசரில் ரோடு ஷோ; பிரச்சாரத்தில் அதகளம் செய்யும் யோகி ஆதித்யநாத்!

 அலிகஞ்ச் பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெற்ற புல்டோசர் ரோடு ஷோ
அலிகஞ்ச் பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெற்ற புல்டோசர் ரோடு ஷோ

உத்தரப் பிரதேச மாநிலம், எட்டா மாவட்டம், அலிகஞ்சில் ஆளும் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட புல்டோசர் ரோடு ஷோ மக்களை பெரிதும் கவர்ந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஃபரூகாபாத் மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள எட்டா மாவட்டத்தின் அலிகஞ்ச் டிஏவி இன்டர் கல்லூரி மைதானத்தில், நேற்று பாஜக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இந்த பிரச்சார நிகழ்ச்சியை முன்னிட்டு, முதல்வர் வருவதற்கு முன்பு, அப்பகுதியில் புல்டோசர் பிரேக் டான்ஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் புல்டோசர் ரோடு ஷோ (கோப்பு படம்)
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் புல்டோசர் ரோடு ஷோ (கோப்பு படம்)

இதையொட்டி 10-க்கும் மேற்பட்ட புல்டோசர்கள் அங்கு கொண்டுவரப்பட்டன. அவற்றில் பிரச்சார பாட்டு இசைத்து கூட்டத்தை ஆரவாரம் செய்தனர். அப்போது புல்டோசர் ஆபரேட்டர்கள் ஸ்டண்ட் செய்தனர். மேலும், புல்டோசரை மேலும் கீழுமாக ஏற்றி, இறக்கி 'பிரேக் டான்ஸ்' செய்தது கூட்டத்தினரை வெகுவாக கவர்ந்தது. அப்போது பாஜக தொண்டர்கள் புல்டோசர் முன் பகுதியில் ஏறி நின்று 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் மேடையில் நிகழ்த்தப்பட்ட உரையை விட, புல்டோசர் வேடிக்கையை காண அதிக மக்கள் கூட்டம் திரும்பியதால், பாஜகவின் அலிகஞ்ச் எம்எல்ஏ சத்யபால் சிங் ரத்தோர், புல்டோசர் நிகழ்ச்சியை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்

பின்னர் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தில் பேசுகையில், "குற்றவாளிகள் மற்றும் தேச விரோதிகளைக் கையாள இந்த இயந்திரங்களின் (புல்டோசர்) தனித்துவமான பயன்பாட்டை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி நமது பாதுகாப்பை அச்சுறுத்துகின்றன. அந்த கூட்டணி ஒவ்வொரு நபரின் பாக்கெட்டையும் கொள்ளையடிக்கும் கூட்டணி. அது ராமர் கோயிலை எதிர்க்கும் கூட்டணி” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in