நவ. 1-ல் அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவு

நவ. 1-ல் அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவு

உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவ. 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

நவ.1-ம் தேதி உள்ளாட்சிகள் தினமாகும். அன்றைய நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டங்களை நடத்த வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஊரக வளர்ச்சி ,ஊராட்சித் துறையில் மாவட்ட அலுவலகத்தில் ஏதேனுமொரு இடத்தில் பல்வேறு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பணிகள் குறித்த கண்காட்சி நடத்தாலம். ஏதேனும் ஒரு ஊராட்சியில் ஆட்சியர் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in