பெண்களுக்கு மட்டுமல்ல பயணிகளுக்கும் பாதுகாப்பு இல்லை: அண்ணாமலையை தாக்கி காயத்ரி ரகுராம் ட்விட்

பெண்களுக்கு மட்டுமல்ல பயணிகளுக்கும் பாதுகாப்பு இல்லை: அண்ணாமலையை தாக்கி காயத்ரி ரகுராம் ட்விட்

அண்ணாமலையின் தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்தேன். இனி பயணிகளுக்கும் பாதுகாப்பில்லை என்று நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட் பரபரப்பைக் கிளப்பியுள்ளது

இண்டிகோ விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு டிச.10-ம் தேதி சென்ற போது விமானத்தின் அவசர காலக்கதவை பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா திறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தேஜஸ்வி சூர்யாவுக்கு விமான போக்குவரத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியானது. விமானத்தில் தேஜஸ்வி சூர்யாவுடன் அண்ணாமலையும் பயணித்ததாக தெரிகிறது.

தேஜஸ்வி சூர்யாவுடன் அண்ணாமலை
தேஜஸ்வி சூர்யாவுடன் அண்ணாமலை

இச்சம்பவம், மத்திய அரசின் தலையீட்டால் மூடி மறைக்கப்பட்டதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், இதுதொடர்பான விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை பாஜகவில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ள நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில், " “யார் செய்த சேட்டை ? எங்க ________ செய்த சேட்டை நினைவிருக்கிறதா? இது தேசிய குற்றம். பயணிகளை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக அவர்கள் சட்டபூர்வமாக கைது செய்திருக்க வேண்டும். பறக்கத் தயாரான பயணிகள் விமானத்தை பெரும் ஆபத்தில் தள்ளிய காரியத்தை சாதாரண குடிமகன் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு 2 வருடம் வரை சிறை சட்டப்படி தண்டனை உண்டு. கர்நாடக வளர்ப்பு மகன் சென்னை - திருச்சி விமானத்தில் சென்ற 100 பயணிகள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார். மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டார் என்பது எப்படிச் சரி? சட்டப்படி 1 மன்னிப்பு கடிதத்தை வாங்க நிறுவனத்திற்கு உரிமை இல்லை. நிகழ்வு அடிப்படையில் புகார் கொடுத்து உரிய நபரை மாநில காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். வளர்ப்பு மகன் விளையாட்டு வேடிக்கை பார்ப்பது வாரிசு அரசியலின் அலங்கோல முகம். அண்ணாமலையின் தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்தேன். இனி பயணிகளுக்கும் கூட பாதுகாப்பில்லை போலிருக்கிறது. எச்சரிக்கை காரியகர்த்தாக்கள்" என்று பதிவிட்டுள்ளார். அண்ணாமலையைத் தாக்கி காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in