திருட்டு ரயிலே ஏறி வந்தாலும்..: திமுகவை சீண்டிய நடிகை கஸ்தூரி

 நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரிதிருட்டு ரயிலே ஏறி வந்தாலும்..: திமுகவை சீண்டிய நடிகை கஸ்தூரி

திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை என வட மாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக திமுகவை சீண்டும் வகையில் நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இருந்து அதிகளவில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வெளியேறி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், ‘’ வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை . இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை’’ என பதிவிட்டுள்ளது.

திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம் என நடிகை கஸ்தூரி குறிப்பிட்டுள்ளது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் நடிகை கஸ்தூரியை திமுகவினர் வசைபாடி வருகின்றனர்.

 நடிகை கஸ்தூரி ட்விட்
நடிகை கஸ்தூரி ட்விட்வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்; திமுகவை சீண்டிய நடிகை கஸ்தூரி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in