தேசிய போட்டித் தேர்வுகளில் வட இந்தியர்கள் மோசடி! அமைச்சர் அதிர்ச்சி தகவல்

தேசிய போட்டித் தேர்வுகளில் வட இந்தியர்கள் மோசடி! அமைச்சர் அதிர்ச்சி தகவல்
Updated on
1 min read

"தமிழகத்தில் தமிழே தெரியாமல் வட இந்தியர்கள், குறிப்பாக இந்தி பேசுபவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வேலைகளில் சேருகின்றனர். இதனை மத்திய அரசு தெரிந்தும் தெரியாததுபோல் இருந்து விடுகிறது” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் ரயில் நிலைய சாலையில் கட்டப்பட்டு வரும் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அலுவலகக் கட்டிடப் பணியினை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ், செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேர்வு நேரத்தில் நடைபெறும் மோசடி என்பது இப்போது மட்டும் நடப்பது கிடையாது. வட மாநிலங்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் இதுபோன்று தொடர்ச்சியாகவே மோசடி நடைபெற்று வருகிறது. அதுவும் தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் வட இந்தியர்கள் ப்ளூ டூத் போன்ற உபகரணங்களைக் கொண்டு மோசடி செய்து வெற்றி பெறுவது தொடர்கதையாகி வருகிறது.

தமிழகத்தில் தமிழே தெரியாமல் வட இந்தியர்கள், குறிப்பாக இந்தி பேசுபவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வேலைகளில் சேருகின்றனர். இதனை மத்திய அரசு தெரிந்தும் தெரியாததுபோல் இருந்து விடுகிறது. ஆனால், தமிழகப் பள்ளி, கல்லூரிகள், அரசுத் தேர்வாணையத் தேர்வுகளில் இதுபோல் முறைகேடு இல்லாமல் தேர்வுகள் நேர்மையாக நடைபெறுவதே எங்களுக்குப் பெருமிதம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in