வேட்பு மனு தாக்கல்... வட சென்னையில் சேகர்பாபு ஜெயக்குமார் வம்படியாய் மோதல்!

திமுக -அதிமுக இடையே வாக்குவாதம்
திமுக -அதிமுக இடையே வாக்குவாதம்

வடசென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக வேட்பாளரும், அதிமுக வேட்பாளரும் ஒரே நேரத்தில் வந்ததால், அமைச்சர் சேகர்பாபுவுக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கல்

ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். வட சென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமியும், அதிமுக சார்பில் ராயபுரம் மனோவும் போட்டியிடுகின்றனர். இன்று பங்குனி உத்திரம் என்பதால், வட சென்னையில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய ராயபுரம் மண்டல தேர்தல் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் திரண்டனர்.

இதனால் அப்பகுதியே திருவிழா போல் காட்சியளித்தது. குறிப்பாக, திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் ஒரே நேரத்தில் வந்ததால் யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பதில் சிக்கல் நிலவியது. இதை அறிந்து வெளியே இருந்த தொண்டர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கே திமுக அதிமுகவினரிடையே வாக்குவாதமும் மூண்டது. குறிப்பாக, அமைச்சர் சேகர்பாபுவும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டதால் நீண்ட நேரம் தாங்கள் காத்திருப்பதாக பாஜகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் குவிப்பு
போலீஸ் குவிப்பு

இதனால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அங்கு பதற்றம் நிலவியது. பிறகு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, முதலில் திமுக வேட்பாளரை வேட்பு மனு தாக்கல் செய்யவைத்தனர். அதன் பிறகு, அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக வடசென்னையில் பதற்றம் நிலவியதால் அப்பகுதியில் திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, ”எங்களுக்கு 12- 12.30 மணி வரை நேரம் ஒதுக்கினார்கள். 12.15 மணிக்கு தான் நாங்கள் வந்தோம். எங்களது வரிசை எண் 2, அதிமுகவின் வரிசை எண் 7. ஆனால் வேட்பாளர் முன்கூட்டியே வந்துவிட்டார். வரிசை எண் படி, திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்” என்றார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ, “ முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று கூறினார்கள். நாங்கள் தான் முதலில் வந்தோம். 11.49 மணிக்கு நாங்கள் வந்துவிட்டோம். கேமராவிலும் அது பதிவாகி உள்ளது. நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தயாரான போது, திடீரென திமுகவினர் வந்தனர். மரபை பின்பற்றாமல், எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் திமுகவினர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முதலில் வந்தவர்கள் என்று பார்த்தால், எங்களைத் தான் அனுமதித்திருக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரி கூறிய பிறகும், திமுகவினர் அதை ஏற்காமல் வாக்குவாதம் செய்தனர். திமுக வேட்பாளரின் டோக்கன் எண் 8, எங்களின் டோக்கன் எண் 7” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in