ஏக்நாத் ஷிண்டே-பட்னாவிஸ் அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சர் கூட இல்லை: மகளிர் தினத்தில் கொதித்த எதிர்க்கட்சிகள்

ஏக்நாத் ஷிண்டே-பட்னாவிஸ்
ஏக்நாத் ஷிண்டே-பட்னாவிஸ் ஏக்நாத் ஷிண்டே-பட்னாவிஸ் அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சர் கூட இல்லை: மகளிர் தினத்தில் கொதித்த எதிர்க்கட்சிகள்

இன்று சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட மகாராஷ்டிரா அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே-தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சர்கூட இல்லாததை எதிர்க்கட்சிகள் விமர்ச்சித்துள்ளன.

இது தொடர்பாக விமர்சித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், “மகாராஷ்ட்டிராவில் பல பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், தகுதியின் அடிப்படையில் அமைச்சரவையில் இடம் பெறத் தகுதியான மூத்த பெண் தலைவர்கள் உள்ளனர், ஆனால் ஷிண்டே-பட்னாவிஸ் அரசாங்கம் அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவத்தை புறக்கணித்துள்ளது. இது மகாராஷ்டிராவுக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்றார்.

மகாராஷ்டிர அரசில் பாஜக மற்றும் சிவசேனா (ஷிண்டே பிரிவு) சார்பில் தலா 9 பேர் என 18 அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் அமைச்சரவையில் பெண் அமைச்சர் ஒருவர்கூட இல்லை. இது தொடர்பாக, அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பெண் அமைச்சர்கள் இருப்பார்கள் என முதல்வரும், துணை முதல்வரும் கூறி வருகின்றனர்.

மாநிலத்தில் முதலமைச்சர் உட்பட 43 அமைச்சர்கள் இருக்கலாம் என்பது அனுமதிக்கப்பட்ட வரம்பு. ஆனால் முதல்வர், துணை முதல்வர் மற்றும் 18 அமைச்சர்களுடன், தற்போது மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 20 ஆக உள்ளது. அதாவது இன்னும் 23 அமைச்சர்களுக்கு இடமளிக்க வாய்ப்பு உள்ளது.

மகாராஷ்ட்டிர மாநில சட்டப் பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 288 ஆகும். இதில் 24 பேர் பெண் எம்எல்ஏக்கள், அதாவது 8.33 சதவீதம் பேர். பாஜக 12 பெண் எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது, மகாராஷ்டிராவில் இதுவரை ஒரு பெண் முதல்வராக இருந்ததில்லை. இருப்பினும், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், அமைச்சரவையில் ஒரு சில பெண் அமைச்சர்களாவது இருப்பதை உறுதி செய்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in