‘டாஸ்மாக் இலக்கு’ என செய்தி வெளியிட்டால் வழக்கு பாயும் - அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

‘டாஸ்மாக் இலக்கு’ என செய்தி வெளியிட்டால் வழக்கு பாயும் - அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

தீபாவளிக்கு டார்கெட் வைத்து டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்வதாக வந்திருக்கும் தகவல்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்திருக்கிறார்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் இலக்கு வைத்து மது விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியானது. மாவட்டம் தோறும் இலக்கு வைத்து மது விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தீபாவளியின் போது 708 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் வசூலானதாக நேற்று செய்திகள் வெளியாகின.

600 கோடி என்ற இலக்கை தாண்டி 708 கோடி அளவிற்கு மது விற்பனையானதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் இதற்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் இலக்கு வைத்து மது விற்பனை செய்யப்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமாக டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்

அவரின் பதிவில், “தீபாவளிக்கு முன்பாக ‘டாஸ்மாக் இலக்கு’ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டு, அதனைச் சுட்டிக்காட்டிய பிறகு ஒரு தனியார் தொலைக்காட்சி அதனை நீக்கியது. தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் ‘விற்பனை விவரம்’ என்று பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. அரசு நிறுவனங்கள் மீது தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் உண்மை நிலையை அறியாமலும், செயல்படுவது தவறு. டாஸ்மாக் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in