அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை: பாஜகவை விட்டு விலகுவதாக காயத்ரி ரகுராம் ட்விட்

அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை: பாஜகவை விட்டு விலகுவதாக காயத்ரி ரகுராம் ட்விட்

அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி கனத்த இயத்துடன் பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். கட்சியின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதுடன், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வந்தார்.

இந்தநிலையில், பாஜகவின் சிறுபான்மை அணியின் தலைவரான டெய்சியை, அதே கட்சியைச் சேர்ந்த திருச்சி சூர்யா, ஆபாசமாக பேசினார். அவர்கள் இருவரும் பேசிய ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த ஆடியோ தொடர்பாக அண்ணாமலை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காயத்ரி ரகுராம் ட்விட் செய்தார்.

இதையடுத்து கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதாக காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து 6 மாத காலம் நீக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்நிலையில், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சரியாக செயல்படவில்லை” என்று காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியிருந்தார். மேலும்," நான் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனிமைப்படுத்தபடுவதாக உணர்கிறேன் “ என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன். இந்த முடிவை எடுக்கக் காரணம் அண்ணாமலை தான். அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப் படமாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர். அண்ணாமலை மீது காவல் துறையில் புகார் அளிக்கத் தயாராக உள்ளேன். பெண்களுக்கான சமஉரிமை மற்றும் மரியாதை தராததால் தமிழ்நாடு பாஜகவிலிருந்து விலகுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளதுடன் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in