செங்கோல் விவகாரத்தில் எந்த அரசியலும் வேண்டாம்: நிர்மலா சீதாராமன் காட்டம்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்செங்கோல் விவகாரத்தில் எந்த அரசியலும் வேண்டாம்: நிர்மலா சீதாராமன் காட்டம்

தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் இடம்பெறப் போகிறது. இதில் எந்த விதமான அரசியலும் செய்ய வேண்டிய அவசியமில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்செங்கோல் விவகாரத்தில் எந்த அரசியலும் வேண்டாம்: நிர்மலா சீதாராமன் காட்டம்

புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள செங்கோல் குறித்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை, இல.கணேசன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘’நாடாளுமன்றம் புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி 28-ம் தேதி நாட்டிற்கு அர்ப்பணம் செய்கிறார்.1947-ம் ஆண்டு நடைபெற்ற முக்கியமான சம்பவம். ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதற்கு ஆதாரங்களில் ஒன்றாக இருக்க கூடிய செங்கோல் நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் வைக்கப்பட உள்ளது.

20 ஆதீனங்கள் 28-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். நேருவிற்கு வழங்கப்பட்ட செங்கோலை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் பக்கத்தில் மரியாதைக்குரிய ஸ்தானத்தில் வைக்க உள்ளார். நீதியும், நியாயமான ஆட்சியும் நடக்கிறது என்பதை நிருப்பிக்க நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட உள்ளது.

செங்கோல் வைப்பதில் எந்த அரசியலும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் இது பெருமிதமான நிகழ்ச்சி இது. நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கிறோம், பங்கேற்கவில்லை என்பது அவர்களின் முடிவை தெரிவித்து இருக்கிறார்கள். அது அவர்களின் விருப்பம்.

ஆனால், அடுத்த ஒரு நூறு ஆண்டுகளுக்கு இருக்கக்கூடிய கௌரவமான கட்டிடம் அது. மக்களுடைய பிரச்சினைகளை எடுத்துப் பேசக்கூடிய அந்த சபையைப் புறக்கணிக்கப் போகிறோமா ? நான் அவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இது ஜனநாயகத்தின் கோயில்.

பிரதமரை பிடிக்கும், பிடிக்கவில்லை என எதுவாக இருந்தாலும் ஜனநாயகத்தின் மக்களுக்குத் தேவையான விஷயங்களை பேசக்கூடிய கோயில் திறப்பு விழா இது என்பதை தாழ்மையாக கேட்டு கொள்கிறேன். எதிர்கட்சிகள் அனைவரும் அவர்களின் முடிவு திரும்பவும் யோசித்து மக்களுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்.

குடியரசு தலைவரை நாங்கள் புறக்கணிக்கிறோம் என எதிர்கட்சிகள் கூறுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. குடியரசு தலைவருக்கு எதிராக இவர்கள் எடுத்து வைத்த பிரச்சாரங்கள் எங்களிடம் உள்ளது. அதனை மக்களும் மறக்கமாட்டார்கள். இப்போது இவர்களுக்கு எங்கிருந்து ஞானோதயம் வந்தது?

செங்கோல் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. மதுரை ஆட்சி செய்கின்ற மீனாட்சி அம்மன் கையில் கூட செங்கோல் உள்ளது. அது நம்முடைய பாரம்பரியம் கலாச்சாரம். ஜனநாயகத்தில் மக்களின் சக்தி அதனைதான் இந்த செங்கோல் பிரதிப்பலிக்கிறது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in