அதிமுகவை விட்டு எங்களை யாராலும் நீக்க முடியாது: ஓபிஎஸ் காட்டம்!

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்எங்களை அதிமுகவை விட்டு யாராலும் நீக்க முடியாது: ஓபிஎஸ் காட்டம்

பிட்பாக்கெட் அடிப்பது போல அதிமுக பொதுச் செயலாளர் பதவியை அடித்து சென்று விடலாம் என நினைக்கிறார்கள். அதிமுகவை விட்டு எங்களை யாராலும் நீக்க முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான மனுதாக்கலை எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘’அதிமுகவின் உச்சப்பட்ச பதவியான பொதுச்செயலாளர் பதவி, அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு உறுப்பினர் அட்டைகளை புதுப்பிக்க வேண்டு, புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு அட்டை வழங்கபட்டிருக்க வேண்டும்

ஆனால், அது எதுவுமே முறைப்படி இல்லாமல் பிட்பாக்கெட் அடிப்பது போல பொதுச்செயலாளர் பதவியை அடித்துவிடலாம் என தேர்தலை அவசரகதியில் அறிவித்துள்ளனர். கேடிகளையும், ரவுடிகளையும் கொண்டு வந்து பொதுக்குழு நடத்தினார்கள். தற்போது வரை தண்ணீர் பாட்டில் பார்த்தலேயே ஒருவிதமான அச்சம் வருகிறது.

அந்த பொதுக்குழுவைத் இந்திய தேர்தல் ஆணையம் அதனை அங்கீகரிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் சென்று பல்வேறு தீர்ப்புகளைப் பெற்று வந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மூலமாக மக்கள் நீதிமன்றம் சென்ற இவர்கள் தோல்வியைத் தழுவினார்கள். மக்கள் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது நிரூபணமானது. அதற்கு பின்பும் இவர்கள் திருந்தவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது?

அந்த தேர்தலில் அதிமுக தோற்றதற்கு யார் காரணம் என்பது நாடாறியும். அதிமுகவின் சட்ட விதி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை எம்ஜிஆர் உருவாக்கினார். அதனைக் கட்டிக் காப்பாற்றிய பெருமை ஜெயலலிதாவையே சேரும்.

ஆனால், தமிழ் நாட்டில் இவரை போன்ற அரசியல் சர்வதிகாரியை பார்த்தது இல்லை. தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டது போல பொதுச்செயலாளர் பட்டத்தை சூட்டிக் கொள்ள விரும்புகிறார். ஒரு சாதாரண தொண்டன் கூட பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் என்ற நீதியை மாற்றி மிட்ட மிராசுகள், ஜமீன்தாரர்கள் மட்டுமே போட்டியிடும் நிலைக்கு தள்ளிவிட்டார்கள்.

எங்கள் பயணம் மக்கள் தீர்ப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாசகாரச் சக்தியாக அவர்கள் இருக்கிறார்கள். ஈபிஎஸ்சுக்கு எதிரான மன நிலையில் மக்கள் உள்ளனர் அவர் செல்லும் இடங்களில் அவருக்கான எதிர்ப்பு தொடரும். மக்கள் இவர்களுக்கு தக்கப்பாடம் புகட்டுவார்கள். ஏப்ரல் மாதம் திருச்சியில் மிகப்பெரிய மாநாடு போடப்படும். அதனைத் தொடர்ந்து மாவட்டம் தோறும் இவர்கள் கண்டித்து கூட்டங்கள் நடத்தப்படும்’’ என்றார். இப்பேட்டியின் போது பண்ருட்டி ராமச்சந்திரன் உடனிருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in