`எந்த தலைவர்களும் உங்களை காப்பாற்ற முடியாது'- எச்சரிக்கும் நடிகை காயத்ரி ரகுராம்

`எந்த தலைவர்களும் உங்களை காப்பாற்ற முடியாது'- எச்சரிக்கும் நடிகை காயத்ரி ரகுராம்

"குற்றம் செய்துவிட்டு கட்சியின் பெயரை சொல்லி தப்பித்து விடலாம் என்று நினைக்க வேண்டாம் இது நடக்காது" என்று நடிகை காயத்ரி ரகுராம் எச்சரித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், " திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ம.க., விசிக, பாஜக, அனைத்துக் கட்சி தொண்டர்களுக்கும், குற்றம் செய்துவிட்டு கட்சியின் பெயரை சொல்லி தப்பித்து விடலாம் என்று நினைக்க வேண்டாம் இது நடக்காது. அது எல்லாம் பழைய காலம். இன்று செய்திகள் வெளிவரும், எந்த அரசாக இருந்தாலும் சட்டம் ஒழுங்கு உங்களை தண்டிக்கும். எந்த தலைவர்களும் உங்களை காப்பாற்ற முடியாது. நீங்கள் மாநிலக் கட்சித் தலைவராக இருந்தாலும் அல்லது மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தாலும் குற்றத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in