நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை...மீறினால் சிறைதான்: மல்லிகார்ஜுன கார்கே கோபம்

நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை...மீறினால் சிறைதான்: மல்லிகார்ஜுன கார்கே கோபம்

மத்தியில் பாஜக தலைமையிலான அரசை கடுமையாக சாடிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய உரையின் சில பகுதிகள் நீக்கப்பட்டதாகக் கூறி வேதனையை வெளிப்படுத்தினார்.

அப்போது பேசிய அவர்,"நாடாளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ பேச்சு சுதந்திரம் இல்லை. அதை மீறி பேசத் துணிபவர்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்படுகிறார்கள். 2014-ம் ஆண்டு பணவீக்கத்தை தடுக்கும் வாக்குறுதியுடன் பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும், வறுமையும் அதிகரித்து வருகின்றன. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியது காங்கிரஸ்தான்" என தெரிவித்தார்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் 60 நாள் நடைப்பயணத்தை தொடங்கிவைத்த பின்னர், சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பாகூரில் உள்ள குமானி மைதானத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். அப்போது, காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று, பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இந்தப் பேரணியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அவினாஷ் பாண்டே, மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்குர், மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in