பிப்ரவரி 14 'பசு கட்டியணைப்பு தினம்' வேண்டாம்: பின்வாங்கியது மத்திய அரசு

பசு கட்டியணைப்பு தினம்
பசு கட்டியணைப்பு தினம்பிப்ரவரி 14 அன்று பசு கட்டியணைப்பு தினம்

காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14ம் தேதி, மக்கள் பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என்று மத்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்தது. இதற்கு சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருவதால், இந்த அறிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியம், உலகெங்கும் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14-ம் தேதியை பசுக்களைக் கட்டிப்பிடிக்கும் தினமாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தது. இந்த அறிவிப்பின்படி, பசுக்களைக் கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாடுவது நேர்மறை ஆற்றலை பரப்பும், கூட்டு மகிழ்ச்சியை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் காரணமாக வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் ஏராளமான சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக அரசியல் கட்சிகளும், நெட்டிசன்களும் இணையத்தில் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் எஸ்.கே.தத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், "மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, பிப்ரவரி 14 ம் தேதியை பசு கட்டியணைப்பு தினமாக கொண்டாட இந்திய விலங்குகள் நல வாரியம் விடுத்த வேண்டுகோள் திரும்பப் பெறப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in