நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் நிதிஷ் குமார்: விரக்தியில் பாஜக!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் நிதிஷ் குமார்: விரக்தியில் பாஜக!

பிஹார் சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ்குமார் வெற்றிபெற்றார்.

பிஹார் சட்டப்பேரவையில் இன்று நிதிஷ்குமார் தலைமையிலான அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பு முதல்வர் நிதிஷ்குமார் உரையாற்ற தொடங்கியவுடன், பாஜக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து குரல் விருப்பம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வெற்றிபெற்றது. 243 பேர் கொண்ட சட்டசபையில் மகா கூட்டணியின் பலம் 164ஆக உள்ளது.

இன்று காலையில் பிஹார் சட்டசபை சபாநாயகர் பதவியை வி.கே.சின்ஹா ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ஜேடியு கட்சியின் நரேந்திர நாராயண் யாதவ் இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தலைமை தாங்கினார்.

பிஹாரில் ஆகஸ்ட் 9 ம் தேதி திடீரென பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக நிதிஷ் குமார் அறித்தார். தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அவர், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் சில கட்சிகளின் ஆதரவுடன் அடுத்த நாளே மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இவருடன் ஆர்ஜேடி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த 16 பேர், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 11 பேர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர், ஜிதன் ராம் மாஞ்சியின் கட்சியை சேர்ந்த ஒருவர்,

சுயேட்சை ஒருவர் என மொத்தம் 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in