பிஹார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்குமார்: அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?

பிஹார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்குமார்: அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?

பிஹார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பகு சௌகானிடம் அளித்தார்

இன்று மாலை ஆளுநரை சந்தித்த நிதீஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் அளித்தார். மேலும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிதீஷ்குமார், “ பாஜகவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக்கொண்டது. இந்த முடிவை எங்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் முழுமனதாக ஏற்றுக்கொண்டனர்” என கூறினார்.

புதிதாக பதவியேற்கவுள்ள நிதீஷ் குமாரின் அரசில் ஆர்ஜேடி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் ஆர்ஜேடி கட்சிக்கு 79 இடங்களும், பாஜகவுக்கு 77 இடங்களும், உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 இடங்களும், காங்கிரஸ் 19 இடங்களையும், சிபிஎம்-எல் 12 இடங்களையும் வைத்துள்ளது. தற்போது ஐக்கிய ஜனதா தளம் கடகட்சி பாஜகவுடனான கூட்டணியை முறித்துள்ளதால். ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள்உள்ளிட்ட கட்சிகளின் 164 உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறார் நிதீஷ் குமார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in