பிஹார் அரசியலில் நொடிக்கு நொடி பரபரப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதீஷ் - துணை முதல்வர் யார்?

பிஹார் அரசியலில் நொடிக்கு நொடி பரபரப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதீஷ் - துணை முதல்வர் யார்?

பிஹார் மாநில ஆளுநர் பகு சௌகானை சந்தித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதீஷ்குமார்.

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவுடன் சென்று ஆளுநரை சந்தித்த நிதீஷ்குமார், பிஹாரில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் அளித்துள்ளனர். ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தவுடன் நாளையே முதல்வராக பதவியேற்க நிதீஷ்குமார் முடிவு செய்துள்ளார்.

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் ஆர்ஜேடி கட்சிக்கு 79 இடங்களும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 19 இடங்களும், சிபிஎம்-எல்க்கு 12 இடங்களும் உள்ளதால் சுமார் 160 உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றவுள்ளார் நிதீஷ் குமார். புதிதாக பதவியேற்கவுள்ள நிதீஷ் குமாரின் அரசில் ஆர்ஜேடி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக இன்று காலையில் பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்ட நிதீஷ்குமார், மாலை 4 மணியளவில் பிஹார் மாநில ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த நிதீஷ்குமார், “ பாஜகவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக்கொண்டது. இந்த முடிவை எங்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் முழுமனதாக ஏற்றுக்கொண்டனர்” என கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in