‘ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்’ - நிதிஷ் குமாரின் புதிய கோரிக்கை

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

'ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்' என்ற கொள்கைக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

பிஹாரில் ரூ.15,871 கோடி மதிப்பிலான மின் துறை திட்டங்களை வெளியிட்டு பேசிய அவர், மற்ற மாநிலங்களை விட பிஹார் மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அதிக விலையில் மின்சாரம் பெறுகிறது என்றார்.

மேலும், "அனைத்து மாநிலங்களும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றன. ‘ஒரே நாடு, ஒரே மின் கட்டணம்' கொள்கை இருக்க வேண்டும் என்று நான் கடந்த காலங்களில் பலமுறை கூறியுள்ளேன். சில மாநிலங்கள் மட்டும் மத்திய அரசின் உற்பத்தி அலகுகளில் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கவேண்டியுள்ளது ஏன்? நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின்விகிதம் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும், "எங்கள் மின் நுகர்வோருக்கு நாங்கள் மானியம் வழங்குகிறோம். அதிக விலையில் மின்சாரம் வாங்குகிறோம், எங்கள் நுகர்வோருக்கு மிகக் குறைந்த விலையில் வழங்குகிறோம். இலவச மின்சாரம் வழங்குவோம் என்று பேசுபவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

2018 அக்டோபரில் மாநிலத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார இணைப்பை தனது அரசாங்கம் உறுதி செய்தது என்று நிதிஷ்குமார் கூறினார். 2005-ல் பிஹார் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தபோது, ​​மாநிலத்தில் வெறும் 700 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. தற்போது அது 6,738 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது என்றும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக மாநிலத்தில் ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின்சார மீட்டர்களை நிறுவ முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in