திருச்சி சிவா மகனுக்கு நித்யானந்தா அளித்த திடீர் விருது: காரணம் இது தான்

திருச்சி சிவா மகனுக்கு நித்யானந்தா அளித்த திடீர் விருது: காரணம் இது தான்

பாஜக ஓபிசி பிரிவின் மாநில செயலாளரும், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனுமாகிய திருச்சி சூர்யாவிற்கு கைலாசா தர்மரட்சகர் விருதை நித்யானந்தா அறிவித்துள்ளார். இந்த விருதை தாம் பெற்றது பாக்கியமாக கருதுவதாக திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனான திருச்சி சூர்யா, பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் சேர்ந்தார். இதையடுத்து பாஜகவின் ஓபிசி அணி மாநிலச்செயலாளராக திருச்சி சூர்யா நியமிக்கப்பட்டார். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் குறித்து திருச்சி சிவா கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

இந்த நிலையில், அவருக்கு நித்யானந்தா விருது அறிவித்து அதை காணொலி மூலமே வழங்கி உள்ளார். திருச்சி சூர்யாவிற்கு கைலாசா தர்மரட்சகர் விருதை நித்யானந்தா வழங்கியுள்ளார். அத்துடன் இந்து மதத்திற்கு ஆதரவாவும், சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் திருச்சி சூர்யாவிற்கு வரவேற்பு இருப்பதால் இந்த விருதை வழங்கியதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவில் திடீரென தோன்றிய நித்தியானந்தா சூர்யா சிவாவிற்கு கைலாசா தர்மரட்சகர் விருது வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும வகையில், தான் திருவண்ணாமலையாரின் பக்தர் என்றும், நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து விருது கிடைத்தது தான் பாக்கியமாக நினைப்பதாகவும் திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.

பல்வேறு வழக்குகளில் சிக்கி தேடப்பட்டு வரும் நித்யானந்தாவிடமிருந்து பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in