நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட்: தேர்தலுக்கான கவர்ச்சி அறிவிப்புகள் இருக்குமா?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட்: தேர்தலுக்கான கவர்ச்சி அறிவிப்புகள் இருக்குமா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு 2023-2024-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளாா். அவா் தாக்கல் செய்யும் 5-வது நிதிநிலை அறிக்கையாகவும், பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடைசி முழுநேர நிதிநிலை அறிக்கையாகவும் இது அமையும்.

இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாகவே அமைய உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிற கடைசி முழுமையான பட்ஜெட்டாக இது அமைகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்களைக் கவரும் வகையில் இந்த பட்ஜெட் கவர்ச்சி பட்ஜெட்டாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குறிப்பாக புதிய வரிவிதிப்புகள் இருக்காது, மாதச் சம்பளதாரர்களுக்கு வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்வில் சலுகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. வருமானவரி விலக்கு வரம்பு இரண்டரை லட்ச ரூபாயாக இருப்பதை 5 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மேலும் வருமான வரிச்சட்டம் பிரிவு 80-சியின் படி விலக்கு சலுகை என்பது பல வருடங்களாக தொடர்ந்து ஒன்றரை லட்ச ரூபாயாகவே உள்ளது. இது ரூ.2 லட்சமாக உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் புதிய வேலைவாய்ப்புகள், முதலீடு சார்ந்த வளர்ச்சியை மையமாக கொண்டு இந்த பட்ஜெட் அமையும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்.13-ம் தேதி முடிவுக்கு வருகிறது. 2-வது அமர்வு, மார்ச் 13-ம் தேதி தொடங்குகிறது. ஏப்.6-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வரும். இந்தக் கூட்டத்தொடரில் பிபிசி ஆவணப்பட விவகாரம், சீன எல்லையில் நிலவும் பதற்றம், தொழில் அதிபர் அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கிளப்ப எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in