இலங்கைக்கு இன்று செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்... வங்கி கிளைகளைத் திறந்து வைக்கிறார்!

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று இலங்கை செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் அரசு முறை பயணமாக இலங்கை இன்று செல்ல உள்ளார். அங்கு யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையில் எஸ்பிஐ வங்கி கிளைகளைத் திறந்து வைக்க உள்ளார்.

மேலும் யாழ்ப்பாண நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது மத ஸ்தலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in