கர்நாடகாவில் 3,000 ஆபாச வீடியோக்களை வைத்து ஓட்டு அரசியல் செய்கிறது... காங்கிரஸ் மீது நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவை வைத்துக்கொண்டு தேர்தல் வரும் வரை ஓராண்டு காங்கிரஸ் காத்திருந்துள்ளது என நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறது.  மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த எம்.பியும், தேவேகவுடாவின் பேரனுமாகிய  பிரஜ்வல் ரேவண்ணா  300 பெண்களை நாசமாக்கி 3,000-க்கும் அதிகமான வீடியோக்கள் பதிவு செய்து வைத்திருந்த விவகாரம் வெளியாகி அம்மாநிலத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. 

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

கர்நாடகாவில் பாஜக கூட்டணிக்கு இது பெரும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. இந்தநிலையில்  பிரஜ்வல்லின்  தந்தை ரேவண்ணா மாநில அரசால்  கைது செய்யப்பட்டுள்ளார்.  பிரஜ்வல் விவகாரம் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "பென் டிரைவ்வில் இருந்தது குறித்து கர்நாடகா மாநில அமைச்சர்களுக்கு நன்றாகவே தெரியும். பெண்களின் பாதுகாப்பு பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. 

ரேவண்ணா மற்றும் பிரஜ்வல்
ரேவண்ணா மற்றும் பிரஜ்வல்

கர்நாடகா காங்கிரஸ் அரசாங்கத்தைப் பொறுத்தவரை 'ஒக்கலிகா' சாதி ஓட்டுகள்தான் முக்கியம். அந்த ஓட்டுகள் தங்களது கையை விட்டுப் போய்விடும் என்பதற்காகவே அஞ்சியது கர்நாடகா காங்கிரஸ் அரசு. அதனால்தான் முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கிறது. பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவ்வை வைத்துக் கொண்டு ஓட்டு அரசியலுக்காக ஓராண்டு காத்திருந்தது.

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தை முன்வைத்து பாஜகவை காங்கிரஸ் விமர்சிக்கிறது. இந்த விவகாரத்தில் கர்நாடகா அரசு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க நினைக்கிறதோ அதைச் செய்யலாம் என உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் கூறி இருக்கிறது.

பிரிஜ் பூஷன் மீதான புகார்களுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அதனால் அவரது மகனுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்புக் கொடுத்திருக்கிறது. குற்றவாளிகளின் மகன்கள் எத்தனையோ கட்சிகளில் இருக்கின்றனர்" என்று  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in