அடுத்த அதிர்ச்சி... பாஜக பெண் எம்எல்ஏவின் மருமகன் அதிமுகவில் ஐக்கியம்!

அடுத்த அதிர்ச்சி... பாஜக பெண் எம்எல்ஏவின் மருமகன் அதிமுகவில் ஐக்கியம்!

பாஜக மாநில ஓபிசி அணியின் துணைத்தலைவர் அஷோக் குமார், அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை

மக்களவைத் தேர்தலுக்கு அதிமுகவை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தயார்படுத்தி வரும் நிலையில் பிற கட்சிகளில் இருந்து அதிமுகவை நோக்கி படையெடுப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அமமுகவை சேர்ந்த தலைமை நிலையச் செயலாளர் ஐ.மகேந்திரன் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அதேபோல பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளும் இணைந்து தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுக்கும், அண்ணாமலைக்கும் ஷாக் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பாஜக மாநில ஓபிசி அணியின் துணைத்தலைவர் அஷோக் குமார், அக்கட்சியில் இருந்து விலகி சென்னை பசுமைவழி சாலையில் உள்ள எடப்பாடியார் இல்லத்தில் அவரை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

மொடக்குறிச்சி சரஸ்வதி
மொடக்குறிச்சி சரஸ்வதி

எடப்பாடியார் முன்னிலையில் இணைந்த அசோக் குமார் மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருகனும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான டாக்டர் சவுந்தரத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக எம்எல்ஏ மருமகன் அதிமுகவில் இணைந்துள்ளது அதிர்ச்சியையும் அரசியல் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா

நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா, தம்பி!

அடுத்த சர்ச்சை... தேசிய கீதத்தை அவமானப்படுத்திய மன்சூர் அலிகான்!

மன்சூர் அலிகான் தப்புன்னா... ரஜினி பேசுனதும் தப்பு தான்!

அடாவடி வசூல்... கழிவறை கட்டண குத்தகைதாரருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in