தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர்... சென்னையில் சோனியா காந்தி ஆலோசனை

சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை
சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரியின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய தலைவர் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக சென்னையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. திமுகவில் உள்ள ஒவ்வொரு அணி சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மேற்கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகளும், பொதுச்செயலாளருமான பிரியங்காகாந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர். இந்த அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்க நேற்று இரவு சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை வந்தடைந்தனர்.

5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு வந்துள்ள சோனியா காந்தியுடன் தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர், தமிழக அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்தும் கட்சியின் வளர்ச்சி பணிகள், அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கத்தாகூர், ‘’I.N.D.I.A கூட்டணி பலமானதாக இருக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் கட்சி வலிமையாக களத்தில் பேச வேண்டும். பாஜகவின் மதவாத அரசியலை எதிர்த்து செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்” என கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

இளம்பெண் தற்கொலை... ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டம்!

குட்நியூஸ்... தமிழக அரசில் 368 காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பிக்கவும்!

‘பாஸ்போர்ட் ஊழல்’ ஒரே நேரத்தில் 50 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... பிரபல நகைச்சுவை நடிகர் கைது!

பகீர்... காதலி வீட்டார் மயக்க மருந்து கொடுத்து சுன்னத் செய்து விட்டனர்... கதறும் காதலன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in