வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்பிய அண்ணாமலை... கோயிலில் காலில் விழுந்த திருமண ஜோடி!

கோயிலில் அண்ணாமலை காலில் விழுந்து ஆசி பெற்ற ரவி-தேவிகா தம்பதி
கோயிலில் அண்ணாமலை காலில் விழுந்து ஆசி பெற்ற ரவி-தேவிகா தம்பதி

வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பாக கோவை கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் காலில் திருமண ஜோடி ஒன்று விழுந்து வணங்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலை, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் இன்று தங்களது வேட்பு மனுக்களை தக்கல் செய்தனர்.

இதையொட்டி, கணபதி ராஜ்குமார், மருதமலை முருகன் கோயிலில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட திமுகவினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவை உப்பிலிபாளையம் பகுதியில் இருந்து ஊர்வலமாகச் சென்று அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மருதமலை கோயிலில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் சாமி தரிசனம்
மருதமலை கோயிலில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் சாமி தரிசனம்

இதே போல் கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயிலில் பாஜக வேட்பாளர் அண்ணமலை சாமி தரிசனம் செய்தார். பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அவருடன் வந்தனர்.

கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்து ஊர்வலமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அண்ணாமலை சென்றார்.

கோயிலில் அண்ணாமலை காலில் விழுந்து ஆசி பெற்ற ரவி-தேவிகா தம்பதி
கோயிலில் அண்ணாமலை காலில் விழுந்து ஆசி பெற்ற ரவி-தேவிகா தம்பதி

இதனிடையே கோயிலில் இன்று, கோவைப்புதூரைச் சேர்ந்த ரவி மற்றும் தேவிகா ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. அண்ணாமலை வருவதைக் கண்ட மணமக்கள் இருவரும், அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in