மதுரைக்கு வந்துவிட்டது டைடல் பார்க்: தென் மாவட்ட மக்களின் கனவு நிறைவேறியது!

மதுரைக்கு வந்துவிட்டது டைடல் பார்க்: தென் மாவட்ட மக்களின் கனவு நிறைவேறியது!

மதுரையில் புதிய டைடல் பார்க் அமைக்க முதல் கட்டமாக 600 கோடி ஒதுக்கியுள்ள முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ள சு.வெங்கடசேன் எம்பி, மதுரை மற்றும் தென் மாவட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றும் அறிவிப்பு இது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `மதுரை மற்றும் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் முக்கியமானது புதிய தொழில்நுட்பப் பூங்கா மதுரையில் அமைக்கப்பட வேண்டும் என்பது. இதற்காக ஜனவரி 19-ம் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை நானும் எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்களும் நேரில் சந்தித்து கோரிக்க வைத்தோம். இன்றைய தினம் மதுரையில் நடைபெற்ற `தோள் கொடுக்கும் தொழில்களுக்கு' தென் மண்டல மாநாட்டில் விழா பேருரையாற்றிய முதல்வர், டைடல் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து புதிய டைடல் பார்க் அமைக்கப்படும்.

மாட்டுத்தாவணி பகுதியில் இரண்டு கட்டமாக 10 ஏக்கரில் பூங்கா அமையும். முதல் கட்டமாக 600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று அறிவித்துள்ளார். மதுரை மற்றும் தென் மாவட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றும் அறிவிப்பு இது. மதுரை மக்களை நீண்ட நாள் கோரிக்கைக்கு உருவம் கொடுத்துள்ள தமிழக முதல்வருக்கு மதுரை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா தென் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கான வித்து. இந்த ஆண்டு ஜூன் 8-ம் தேதி மதுரை வந்து கொட்டாம்பட்டியில் தங்கிய முதல்வரிடம் `மதுரையில் சிறு குரு தொழில் கூட்டமைப்பின் கான்கிளேவ்' நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தேன். ஏற்றுக்கொண்ட முதல்வர் இன்று அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கான அறிவிப்பை வெளியிட்டுயிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. வாழ்த்துகிறோம் முதல்வரே' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in